உன்னங்குளத்தில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
உன்னங்குளத்தில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இட்டமொழி, மே:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியான மூன்றடைப்பு வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்து மனோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இதற்கு காரணமான சிறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும், நாங்குநேரி அருகே உன்னங்குளம் கிராமத்தில் பொதுமக்கள் நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்திகோட்டை நாட்டார் நலச்சங்க தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். பொருளாளர் முருகையா, வக்கீல் பிரிவு ராஜா, பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story