இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறிய திருப்பரங்குன்றம் பஸ் நிலையம்


இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறிய திருப்பரங்குன்றம் பஸ் நிலையம்
x
தினத்தந்தி 24 May 2021 2:03 AM IST (Updated: 24 May 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்ததால் திருப்பரங்குன்றம் பஸ் நிலையமானது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியது

ிருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்ததால் திருப்பரங்குன்றம் பஸ் நிலையமானது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியது.
மார்க்கெட் -பஸ் நிலையம்
திருப்பரங்குன்றம் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளது. இதனையொட்டி நேற்று  ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் காய்கறிகள் வாங்குவதற்காக தங்களது வீடுகளிலிருந்து இருசக்கர வாகனத்தில் மார்க்கெட்டிற்கு வந்து குவிந்தனர். .அதனால் அவர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்திலேயே நிறுத்தி சென்றனர். அரசு பஸ்கள் வந்து செல்லாத நிலையில் எந்தநாளும் வெறிச்சோடி காணப்பட்ட பஸ்நிலையமானது நேற்று திடீரென்று இருசக்கரவாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியது. 
பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கு வழிசெய்யாத நிலையில் பொதுமக்களுக்கு இருசக்கர வாகனங்களை நிறுத்த பஸ் நிலையம் பயனுள்ளதாக இருந்தபோதிலும், வாகனங்களை எடுத்துச் செல்லும்போது சமூக இடைவெளி கேள்விக்குறியாக இருந்தது. இதுபோல மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு குவிந்த மக்களிடமும் சமூக இடைவெளி இல்லாத நிலை காணப்பட்டது.
இருமடங்கு விலை உயர்வு
இன்று முதல் முழு ஊரடங்கு ஒருவாரம் நீடிக்கப்பட்ட நிலையில் மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தது. மேலும் மக்களிடையே காய்கறிகள் வாங்குவதில் போட்டோபோட்டி நிலவியதால் அதை வியாபாரிகள் பலர் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி காய்கறிகளை இருமடங்குவிலை உயர்த்தி விற்றனர். இதனால் காய்கறி வாங்க வந்தவர்களிடையே அத்தியாவசிய தேவையான குறிப்பிட்ட பொருட்களை வாங்க பணம் இல்லாததால ்ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.

Next Story