ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் நடத்தியவர்கள் மீது வழக்கு


ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் நடத்தியவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 May 2021 2:18 AM IST (Updated: 24 May 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சியை சேர்ந்த வீரமாநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேகம் நடத்த போலீசார் அனுமதி வழங்கப்படாத நிலையில் தடையை மீறி கும்பாபிஷேகம் நடைபெற்றதால், விழாவை நடத்திய கோவில் நிர்வாகி, கும்பாபிஷேகம் நடத்தி வைத்த அய்யர், கோவில் பூசாரி, இசை கலைஞர்கள் உள்பட 5-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story