புளியங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம்
புளியங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
புளியங்குடி, மே:
புளியங்குடி டி.என்.புதுக்குடி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில், இலவச கொரானா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் குமார் சிங், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்குத்தந்தை அருள்ராஜ் வரவேற்றார்.
தனுஷ் குமார் எம்.பி., டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் ெகாரோனா தடுப்பூசி போட்டனர். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ஜோசப் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், மேலாளர் சண்முகவேலு, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story