சமூக இடைவெளியின்றி கடைகளில் குவிந்த பொதுமக்கள்


சமூக இடைவெளியின்றி கடைகளில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 May 2021 2:55 AM IST (Updated: 24 May 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியின்றி கடைகளில் பொதுமக்கள் குவிந்து பொருட்களை வாங்கி சென்றனர்

அரியலூர்
முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் அரியலூர் நகரில் மளிகை, ஜவுளி, காய்கறி கடைகள் என அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பெரிய ஜவுளிக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாரச்சந்தை, மார்க்கெட் தெரு, சின்னக்கடை தெரு, பெரிய கடைத்தெரு உள்பட அனைத்து முக்கிய வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்ககளில் பலர் முககவசம் அணிந்து வந்தாலும், யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.  இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்பதால் காய்கறிகள்  மூன்று மடங்கு உயர்ந்து விற்கப்பட்டது. வழக்கமாக 10 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்று 50 ரூபாய் வரை விற்றது. அதேபோல கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், வெங்காயம் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தன. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரியலூரில் அரசு பஸ்கள் மட்டும் இயங்கின.  அரியலூரில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதால் கொரோனா மேலும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் உள்ளனர்.

 


Next Story