செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; ஊரக வளர்ச்சி துறை ஆணையர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள புனித தோமையர் மலை, காட்டாங்கொளத்தூர் மற்றும் திருப்போரூர் பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோய் தடுப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
தடுப்பூசி முகாம்
மேலும் புனித தோமையர்மலை வட்டாரம், மேடவாக்கம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் நோய்தொற்று குறித்து சர்வே பணிகளையும் காய்ச்சல் முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் போன்றவற்றை பார்வையிட்டார்.இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் மனோகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், செயற்பொறியாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர் விக்டர் அமிர்தராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன், உதவி திட்ட அலுவலர் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story