தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 31 போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 31 போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாரம் தோறும் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தல், தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தல் உள்பட சிறப்பாக பணியாற்றிய 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், சிவக்குமார் உள்பட 31 போலீசாரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story