ஆக்கிரமிப்புகளை தடுக்க சதுப்பு நிலக்காடுகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் அதிகாரி தகவல்


ஆக்கிரமிப்புகளை தடுக்க சதுப்பு நிலக்காடுகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 May 2021 7:50 PM IST (Updated: 24 May 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்புகளை தடுக்க சதுப்பு நிலக்காடுகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார்.

மும்பை, 

மும்பை பெருநகர பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் உள்ளது. சமீபகாலமாக சட்டவிரோத கும்பல் சதுப்பு நிலக்காடுகளை ஆக்கிரமித்து வருகிறது. மேலும் சமூகவிரோதிகள் சதுப்பு நிலக்காடுகளில் கட்டுமான கழிவுகளை கொட்டி அதை அழித்து வருகின்றனர். குறிப்பாக நவிமும்பை, தானே பகுதிகளில் சதுப்புநிலக்காடுகள் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. எனவே இதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்க அவை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என வனத்துறை அதிகாரி வீரேந்திர திவாரி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சதுப்பு நிலக்காடுகளில் ஆக்கிரமிப்பு, அழிக்கப்படுவதை தடுக்க காடுகளை டிரோன்கள் மூலம் கண்காணிக்க உள்ளோம். இதற்காக டிரோன் கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். மேலும் மும்பை பெருநகரில் உள்ள சதுப்பு நிலக்காடுகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணியில் தனியார் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் ஈடுபட உள்ளனர்’’ என்றார்.


Next Story