12-ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்


12-ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்
x
தினத்தந்தி 24 May 2021 7:56 PM IST (Updated: 24 May 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

12-ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.

மும்பை, 

கொரோனா  பரவல் காரணமாக மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொது தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 12-ம் வகுப்பு பொது தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்த அரசின் இந்த முடிவை மும்பை ஐகோர்ட்டு கடுமையாக விமர்சித்து உள்ளது. அரசு கல்வி முறையை கேலி கூத்தாக்குவதாகவும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மத்திய அரசு, மாநில அரசுகளுடன் 12-ம் வகுப்பு பொது தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் மாநில கல்வித்துறை மந்திரி கலந்து கொண்டு அவரது கருத்தை தெரிவித்தார்.

இந்தநிலையில் கூட்டம் முடிந்த பிறகு வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:-

மாநிலத்தில் 25 ஆயிரம் சி.பி.எஸ்.சி. மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 14 லட்சம் மாணவர்கள் உள்ளனர். 12 வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுப்பது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திங்கள் கிழமை (இன்று) கல்வி துறையினர் சந்தித்து பேச அழைத்து உள்ளார். 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை ஐகோர்ட்டில் கூறுவோம். 12-ம் வகுப்பு மாணவர்கள் கடந்த 14 மாதங்களாக படித்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி தேர்வு குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும். தற்போது ஒரே மாதிரியான மதிப்பீடில் கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தகுதியான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி அடுத்த கல்வி ஆண்டுக்கு கல்வி நிலைய வளாகங்களை பாதுகாப்பாக மாற்றவும் கவனம் செலுத்தி வருகிறோம்.

Next Story