நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 24 May 2021 8:27 PM IST (Updated: 24 May 2021 8:27 PM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

நாகப்பட்டினம்:-
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது நாளை(புதன் கிழமை) மாலை மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோமீட்டர்  வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த நிலையில் ‘யாஸ்’ புயல் தீவிர புயலாகவும், அதன் பின்னர் அதி தீவிர புயலாகவும் மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா-மேற்கு வங்கம்(பரதீப்-சாகர் தீவுகள்) இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாகை துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Next Story