விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் 5 பேர் கைது
விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு திருமணம்
விளாத்திகுளம் அருகே மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராள்பானு தலைமையிலான போலீசார் மேலமாந்தைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி சமூக நல அலுவலர் பொன்னுமாரி விளாத்திக்குளம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் செய்தார்.
5 பேர் கைது
இதன் பேரில் அனைத்து மகளிர் ேபாலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை
திருமணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கட்டாலங்குளத்தைச் சேர்ந்த சர்க்கரை மகன் மாரிமுத்து (வயது 27), அவரது தந்தை சர்க்கரை (56), அவரது தாய் காமாட்சி (51), சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story