கிராமப்புறங்களில் கொரோனா பரவலை தடுக்க நடமாடும் மருத்துவ குழு அமைக்க வேண்டும் கலெக்டர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவு
கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் நடமாடும் மருத்துவ குழு அமைத்து பரிசோனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களுரு,
கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக அரசின் வருவாய்த்துறையின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்த கொரோனா கிராமங்களில் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. அதனால் கிராமப்புற மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் டாக்டர்கள் கிராம தங்கல் திட்டத்தை அமல்படுத்துகிறோம்.
இதில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அடங்கிய நடமடும் மருத்துவ கழு, ஒரு நாளைக்கு 3 கிராமங்களுக்கு செல்ல வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். ஆஷா மருத்துவ ஊழியர்கள், கிராமங்களில் வீடு வீடாக சென்று நோய் அறிகுறி குறித்து விவரங்களை சேரிக்க வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களை நடமாடும் மருத்துவ குழுவுக்கு அழைத்து வந்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும் அந்த மருத்துவ குழு, மக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு அதே இடத்தில் ஆர்.ஏ.டி. (ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்) பரிசோதனை செய்ய வேண்டும். இதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அத்தகையவர்களை கொரேனா சிகிச்சை மையத்தில் சேர்க்க வேண்டும்.
ஒருவேளை நோய் அறிகுறிகள் குறைவாக இருந்தால், அவர்களுக்கு மருந்து-மாத்திரைகளை வழங்கி வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் அங்கு பஞ்சாயத்து தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினருடன் நடமாடும் மருத்துவ குழு இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story