முழு ஊரடங்கு டிரோன் மூலம் கண்காணிப்பு


முழு ஊரடங்கு டிரோன் மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 May 2021 10:38 PM IST (Updated: 24 May 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு கண்காணிக்கப்பட்டது.

பரமக்குடி, 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களையும், வெளியில் நடமாடு பவர்களையும் பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். 
இந்தநிலையில் பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் போலீசார் முழு ஊரடங்கை டிரோன் மூலம் கண்காணித்தனர். 
5 முனை பகுதியில் இருந்து பறக்க விடப்பட்ட டிரோன் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் சுற்றி படம் எடுத்தது. டிரோன் பறந்து வந்ததை பார்த்து தெருக்களில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Next Story