மருந்து கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனையா?


மருந்து கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனையா?
x
தினத்தந்தி 24 May 2021 5:17 PM GMT (Updated: 24 May 2021 5:17 PM GMT)

விக்கிரவாண்டி பகுதியில் மருந்து கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விக்கிரவாண்டி, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தலின் படி  தாலுகா வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என கண்காணித்து வருகின்றனர். 
அந்த வகையில் நேற்று காலையில் விக்கிரவாண்டி பகுதியில் திறந்துள்ள மருந்து கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்செல்வி தலைமையிலான அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மருந்து கடை உரிமையாளர்களிடம் மருந்து பொருட்களை தவிர, மளிகை உள்ளிட்ட வேறு எந்த பொருட்களையும் விற்கக்கூடாது, அவ்வாறு விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். தொடர்ந்து கிராமப்புறங்களுக்கு சென்று ஆய்வு செய்த கண்காணிப்பு குழுவினர் அங்கு திறந்திருந்த மளிகை, சிறு பெட்டி கடைக்காரர்களை எச்சரித்தனர். மேலும் ஊரடங்கின் போது வெளியே சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், வருவாய் ஆய்வாளர் சார்லின், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ்பாண்டியன், மலையப்பன், ஜெயப்பிரகாஷ், அலுவலக உதவியாளர் செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story