குன்னூர் பகுதியில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை


குன்னூர் பகுதியில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 May 2021 11:03 PM IST (Updated: 24 May 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் பகுதியில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குன்னூர்,

குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் முழு ஊரடங்கில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு வழிகாட்டுதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை தாங்கினார். 

நகராட்சி வருவாய் அலுவலர் பிந்து, வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் குன்னூர் வியாபாரிகள் சங்கதலைவர் பரமேஸ்வரன் உள்பட காய்கறி பழ வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்கறி, பழங்களை நியாயமான விலையில் விலைப்பட்டியலுடன் நகராட்சியில் அனுமதி பெற்று வாகனங்கள் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம், காய்கறி, பழங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

Next Story