நீலகிரியில் புதிதாக 435 பேருக்கு கொரோனா
நீலகிரியில் புதிதாக 435 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 435 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 651 ஆக உயர்ந்து உள்ளது.
இதுதவிர கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 377 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 12 ஆயிரத்து 677 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,901 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரியில் 335 ஆக்சிஜன் படுக்கைகளில் 307 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 28 படுக்கைகள் காலியாக உள்ளது. 320 சாதாரண படுக்கைகளில் 242 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். 78 படுக்கைகள் காலியாக இருக்கிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story