மாவட்டத்தில் புதிதாக 399 பேருக்கு கொரோனா தொற்று; 3 பேர் சாவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 3 பேர் இறந்தனர்.
புதுக்கோட்டை:
தொற்று பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தொற்று அதிகமாக உள்ளது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 206 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாாவுக்கு தற்போது 3 ஆயிரத்து 543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 பேர் சாவு
இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 54 வயது ஆண், 64 வயது மூதாட்டி, 80 வயது மூதாட்டி ஆகிய 3 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 192 ஆக உயர்ந்தது.
ஆவுடையார்கோவில்
மீமிசல் ஊராட்சி, பாண்டி பத்திரம் கிராமத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அந்த பகுதியை அறந்தாங்கி உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தார். அவருடன் ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேல், குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள், சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர்.
கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை
கந்தர்வகோட்டையில், 11 பேருக்கும், ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Related Tags :
Next Story