முழு ஊரடங்கால் வெள்ளகோவில்,காங்கேயம்,முத்தூரில் சாலைகள் வெறிச்சோடின
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் வெள்ளகோவில்,காங்கேயம்,முத்தூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
காங்கேயம்
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் வெள்ளகோவில்,காங்கேயம்,முத்தூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கால் நேற்று வெள்ளகோவிலில் மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள், பால் நிலையங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதுபோல் குண்டடம், நால்ரோடு, சூரியநல்லூர், மேட்டுக்கடை, ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. குண்டடம் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமின்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
காங்கேயம்
முழு ஊரடங்கை கடைபிடிக்கும் விதமாகவும், கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும் காங்கேயத்தில் நேற்று பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட்டுகள் போன்ற அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் அத்யாவசிய பொருட்களான மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்து கடைகளும் பூட்டிக்கிடந்தன. மேலும் காங்கேயம் நகர சாலைகளான திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை, பழையகோட்டை சாலைகளிலும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் காங்கேயம் போலீசார் நேற்று அதிகாலை முதலே நகர மற்றும் கிராமப்புற சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் காங்கேயம் கடைவீதி பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முத்தூர்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் கடைவீதி, காங்கேயம் சாலை, வெள்ளகோவில் சாலை, ஈரோடு சாலை, கொடுமுடி சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், லேத் பட்டறைகள், கணினி நிறுவனங்கள், நகை கடைகள் டாஸ்மாக் கடைகள், பழக்கடைகள், செல்போன் கடைகள், மாவு மில்கள், போட்டோ ஸ்டுடியோக்கள் உள்பட மற்ற இதர கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் காலை முதலே முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் அரசு மற்றும் தனியார் வங்கிகள், பெட்ரோல் பங்குகள், மருந்துக்கடைகள், பால் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. மேலும் அரசு உத்தரவின்படி ஒரு சில ஓட்டல்கள் திறக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் பார்சலில் உணவுகள் வழங்கப்பட்டன.
மேலும் அத்தியாவசிய உணவு பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள், மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற இதர கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் முத்தூர் நகரம் நேற்று காலை முதலே வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் கிராமப் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன
இதுபோல் நத்தக்காடையூர் பகுதிகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story