‘யாஸ்’ புயல் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


‘யாஸ்’ புயல் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 24 May 2021 11:38 PM IST (Updated: 24 May 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடலூர் முதுநகர், 

அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த 22-ந்தேதி உருவான  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு ‘யாஸ்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) தீவிர புயலாக மாற  வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி இந்த புயல் ஒடிசா மாநிலம் பாரதீப்ல் இருந்து 530 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்தது. புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வங்கக்கடலில் ‘யாஸ்’ புயல் உருவான எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று மதியம் ஏற்றப்பட்டுள்ளது. அதாவது வங்க கடலில் தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை 2-ம் எண் குறிப்பதாகும்.

 இந்த புயலால், கடலூர் மாவட்டத்திற்கு எந்தவித வானிலை மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை, என வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story