நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது


நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 24 May 2021 11:40 PM IST (Updated: 24 May 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

ஊட்டி,

நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு ஒரு வாரம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

இதையொட்டி ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களும் பூட்டு போட்டு மூடப்பட்டு இருந்தது. என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்துமிடத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை கடைகள் அடைக்கப்பட்டன.

இதுதவிர கமர்சியல் சாலை, லோயர் பஜார், எட்டின்ஸ் சாலை, அப்பர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.

பால், குடிநீர் வினியோகம்

அத்தியாவசிய தேவையான பால், குடிநீர் வினியோகம் அனுமதிக்கப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் பணி தொடர்ந்து நடந்தது. 

அதேபோல் பார்சல்கள் வினியோகம் செய்ய கூரியர் நிறுவனங்கள் செயல்பட்டது.கடந்த 2 நாட்களாக நீலகிரியில் இருந்து கிராமப்புறங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவால் அரசு பஸ்கள் இயக்கம் மீண்டும் நிறுத்தப்பட்டது.

சாலைகள் வெறிச்சோடின

போக்குவரத்து பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடியது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஊட்டியில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது. 

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை விட தளர்வுகள் இல்லாத ஊரடங்கில் ஊட்டி நகரம் அமைதியாக காணப்பட்டது. முழு ஊரடங்கை ஒட்டி மாவட்டம் முழுவதும் 400 போலீசார், 330 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாவட்ட எல்லையில் உள்ள 16 சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இ-பதிவு பெற்று வருகிற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் நீலகிரியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story