மதுபாட்டில் விற்பனை செய்த தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கீரனூர்:
கீரனூரை அடுத்த உடையாளிப்பட்டியில் ஒரு வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 65), அவரது மகன் சக்திவேல் (22) மற்றும் கலியபெருமாள (60) ஆகிய 3 பேரையும் உடையாளிப்பட்டி போலீசார் கைது செய்து அறந்தாங்கி கிளையில் சிறையில் அடைத்தனர். இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் உமாமகேஸ்வரி, ஆறுமுகம் உள்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அறந்தாங்கி கிளை சிறையில் உள்ள 3 பேரிடமும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் காண்பித்து, அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story