ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல், சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசம்


ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல், சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 24 May 2021 11:51 PM IST (Updated: 24 May 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

புன்னம்சத்திரம் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல், சோளத்தட்டைகள் தீயில் எரிந்தது.

நொய்யல்
தீ விபத்து
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55).விவசாயி. இவரது வீட்டின் அருகே கால்நடைகளுக்கு போடுவதற்காக வைக்கோல் போர் மற்றும் சோளத்தட்டை போர் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வைக்கோல் போர் மற்றும் சோளத்தட்டை போர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. 
நாசம்
இது குறித்து ராமசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று வைக்கோல் போர் மற்றும் சோளத்தட்டை போரில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். 
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் போர் மற்றும் சோளத்தட்டை போர்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Next Story