அடுக்கம்பாறையில் பச்சிளம் குழந்தை எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மர்மம்
அடுக்கம்பாறையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது.
அடுக்கம்பாறை
எரிந்த நிலையில் குழந்தை பிணம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் எதிரே, கருகிய வைக்கோலுடன் அட்டைப்பெட்டி எரிந்த நிலையில் கிடந்தது. அந்த பகுதியில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது அந்த பெட்டிக்குள் பச்சிளங்குழந்தை கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார், விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
தகாத உறவில் பிறந்ததால் அந்த குழந்தை கொலை செய்யப்பட்டதா அல்லது இறந்த குழந்தை எரிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
அதுவும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 2 நாட்களுக்குள் குழந்தை பெற்றவர்களின் விவரங்களை சேகரித்து குழந்தை கொலை செய்யப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story