மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 24 May 2021 11:58 PM IST (Updated: 24 May 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

காளையார்கோவில்,

இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

மின்சாரம் தாக்கியது

இளையான்குடி தாலுகா வடக்கு சாலைக்கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காளையார்கோவிலில் உள்ள வீட்டில் தனது நண்பர்களுடன் கட்டிட வேலையில் ஈடுபட்டார்.
அப்போது மாலை நேரத்தில் வீட்டில் உள்ள மின்சார விளக்கை திருப்பியுள்ளார். விளக்கின் மின்வயர் திடீரென துண்டானது. இதனால் கண்இமைக்கும் நேரத்தில் அதில் பாய்ந்து இருந்த மின்சாரம் சுரேஷை தாக்கியது. இதில் அலறியபடியே அவர் தூக்கி வீசப்பட்டார்.

சாவு

 இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காளையார்கோவில் போலீசார், சுரேஷின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story