ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 May 2021 12:36 AM IST (Updated: 25 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராஜபாளையம், 
முழு ஊரடங்கு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. ராஜபாளையம் பகுதியில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கை அடுத்து பொதுமக்கள் தேவையின்றி நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் ராஜபாளையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் உத்தரவின் பேரில் போலீசார் நகருக்குள் வர கூடிய முக்கிய சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி  தீவிர சோதனை செய்தனர். அப்போது தேவையின்றி வந்தவர்களின் வாகனத்தை தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். காலை முதல் மதியம் வரை மட்டும் 10 இருசக்கர வாகனம், ஒரு கார், நான்கு சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story