நெல்லையில் மண்டல வாரியாக வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்


நெல்லையில் மண்டல வாரியாக  வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்  மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்
x
தினத்தந்தி 25 May 2021 12:44 AM IST (Updated: 25 May 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர் பகுதியில் மண்டலம் மற்றும் வார்டு வாரியாக பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை:
நெல்லை மாநகர் பகுதியில் மண்டலம் மற்றும் வார்டு வாரியாக பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காய்கறிகள் விற்பனை

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக நெல்லை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நெல்லை மாநகரில் உள்ள தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், நெல்லை ஆகிய 4 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வார்டு வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தச்சநல்லூர் மண்டலம்

அதன்படி தச்சநல்லூர் மண்டலத்திற்கு உதவி வருவாய் அலுவலர் அந்தோணிராஜ் மரியதாஸ் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 1, 2, 54, 55 ஆகிய வார்டுகளுக்கு பொறுப்பு அலுவலராக வருவாய் உதவியாளர் ராதாகிருஷ்ணனும், 3, 4, 39 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் (பொறுப்பு) சண்முகையாவும், 5, 6, 7 ஆகிய வார்டுகளுக்கு சிறப்பு வருவாய் ஆய்வாளர் அருந்தவசும், 8, 9, 10 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் ஹரிஹர புத்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை மண்டலத்திற்கு கண்காணிப்பு அலுவலராக சிறப்பு வருவாய் ஆய்வாளர் வடிவேல் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 11, 12-வது வார்டுகளுக்கு பொறுப்பு அலுவலராக வருவாய் உதவியாளர் (பொறுப்பு) உதயகுமாரும், 13, 22, 24 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் (பொறுப்பு) ராமச்சந்திரனும், 14, 23 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் வேலுச்சாமியும், 15, 21, 25 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் (பொறுப்பு) பழனி குமாரும், 16, 17, 18, 20 ஆகிய வார்டுகளுக்கு சிறப்பு வருவாய் ஆய்வாளர் வடிவேல் முருகனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலப்பாளையம்

மேலப்பாளையம் மண்டலத்திற்கு உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 19-வது வார்டுக்கு வருவாய் உதவியாளர் (பொறுப்பு) சொக்கலிங்கமும், 26, 34 ஆகிய வார்டுக்கு வருவாய் உதவியாளர் சீனிவாசனும், 27, 36 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் சங்கர் ராஜூம், 28, 35 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் வேலாயுதமும், 29, 30, 32 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் (பொறுப்பு) கிறிஸ்டோபர் ஆனந்தராஜூம், 31, 33, 38 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் (பொறுப்பு) முகம்மது பாரூக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை

நெல்லை மண்டலத்திற்கு உதவி வருவாய் அலுவலர் முருகன் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 40, 41, 49 ஆகிய வார்டுகளுக்கு சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஷேக் முகமது இப்ராஹிமும், 42, 43, 44, 45, 46 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் (பொறுப்பு) ராஜூம், 47, 50, 51 ஆகிய வார்டுகளுக்கு உதவி வருவாய் உதவியாளர் முகமது ரிபாயுதீனும், 48, 52, 53 ஆகிய வார்டுகளுக்கு வருவாய் உதவியாளர் (பொறுப்பு) வேல்முருகனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்பு கொள்ளலாம்

இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு தச்சநல்லூர் மண்டல பொதுமக்கள் உதவி வருவாய் அலுவலர் அந்தோணிராஜ் மரியதாசை 9442201309 ஆகிய எண்ணிலும், பாளையங்கோட்டை மண்டல பொதுமக்கள் சிறப்பு வருவாய் ஆய்வாளர் வடிவேல் முருகனை 9842196690 என்ற எண்ணிலும், மேலப்பாளையம் மண்டல பொதுமக்கள் உதவி வருவாய் அலுவலர் மணிகண்டனை 9442201311 என்ற எண்ணிலும், நெல்லை மண்டல பொதுமக்கள் உதவி வருவாய் அலுவலர் முருகனை 9442922127 ஆகிய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story