நெல்லையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி


நெல்லையில்  போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 25 May 2021 12:48 AM IST (Updated: 25 May 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியானார்.

நெல்லை:
நெல்லையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியானார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகரில் வசித்து வந்தவர் ஜான்சன் (வயது 54). இவர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

தற்போது கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் ஜான்சன் கடந்த 21-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பலி

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜான்சன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த ஜான்சனுக்கு கலா என்ற ஆஷா (45) என்ற மனைவியும், ஜேம்ஸ் (22) என்ற மகனும், ஜாஸ்மின் (20) என்ற மகளும் உள்ளனர்.

Next Story