சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுக்கள்


சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுக்கள்
x
தினத்தந்தி 25 May 2021 1:05 AM IST (Updated: 25 May 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்ற லாரிகளை, பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

நாயக்கர்பாளையத்தில்
சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுக்கள்
வி.கைகாட்டி, மே.25-
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கர்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முதல் ஒருவாரத்திற்கு தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாயக்கர்பாளையம் கிராம மக்களுக்கு இடையூறு மற்றம் விபத்துகள் ஏற்படுத்தும் விதமாக வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் உள்ள ஒரு சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு செல்லும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக இயங்கி வருகின்றன. மேலும் அந்த ஆலைக்கு 24 மணி நேரமும் சுண்ணாம்புக்கல் எடுத்து செல்வதால் ஊரடங்கில் கூட இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், நேற்று காலை சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்ற டிப்பர் லாரிகளை நாயக்கர்பாளையத்தில் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த ஆலை நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முழு ஊரடங்கு முடியும் வரை சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்லும் லாரிகளை இயக்க மாட்டோம் என்று உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story