ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திருமணத்திற்கு சரக்கு ஆட்டோவில் பயணம்; டிரைவர் கைது
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திருமணத்திற்கு சரக்கு ஆட்டோவில் பயணம் செய்ததால் டிரைவர் கைது செய்த போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் இருந்து புதுவேட்டைகுடி வழியாக வேப்பூர் கிராமத்திற்கு சரக்கு ஆட்டோவில் 20 பேர், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வந்து கொண்டு இருந்தனர். அப்போது வேப்பூர் பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர், சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தார். இதில், விதிமுறையை மீறியும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஆட்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனடியாக சரக்கு ஆட்டோவில் பயணம் செய்தவர்களை கீழே இறக்கி விட்டு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவர் காடூர் கிராமத்தைச் சேர்ந்த மூலகசெல்வனை (வயது 44) கைது செய்தார். மேலும் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்களிடம் 20 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story