கார்-லோடு ஆட்டோ மோதல்; முதியவர் பலி
கார்-லோடு ஆட்டோ மோதியதில் முதியவர் பலியானார்.
நெல்லை:
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முத்தையா (வயது 60). இவர் தனது வீட்டில் வைத்து குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தையா ஒரு லோடு ஆட்டோவில் குளிர்பானங்களை ஏற்றிக் கொண்டு விற்பனைக்காக சென்று கொண்டிருந்தார். லோடு ஆட்டோவை நெல்லையை அடுத்த கீழ நத்தத்தை சேர்ந்த கல்லத்தியான் ஓட்டினார். கீழநத்தம் நான்கு வழிச்சாலையில் சென்றபோது அந்தப் பகுதியில் எதிரே வந்த காரும், லோடு ஆட்டோவும் மோதிக்கொண்டன.
இதில் முத்தையாவும், கல்லத்தியானும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கல்லத்தியானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story