காப்பகத்தில் 10 சிறுமிகள், 3 பணியாளர்களுக்கு கொரோனா
காப்பகத்தில் 10 சிறுமிகள், 3 பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
வாடிப்பட்டி,மே.
மதுரை சமயநல்லூர் அருகே தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு 6 வயதுக்குட்பட்ட 27 சிறுமிகளும், 8 பணியாளர்களும் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காப்பகத்தில் தங்கியிருந்த பணியாளர் ஒருவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து அங்கு தங்கியுள்ள 27 சிறுமிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 சிறுமிகள் மற்றும் 2 பணியாளர்களுக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. அதனால் அவர்கள் அனைவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தனிமைப்படுத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் காப்பகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை மூலம் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
Related Tags :
Next Story