மதுரை சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் 15ந்தேதி வரை ரத்து


மதுரை சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் 15ந்தேதி வரை ரத்து
x
தினத்தந்தி 25 May 2021 1:26 AM IST (Updated: 25 May 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

மதுரை சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் 15ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை,மே.
கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் ரெயில் போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதற்கிடையே, பயணிகளின் வரத்து குறைவால் சில ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாகர்கோவில்-கோவை பகல்நேர சிறப்பு ரெயில் (வ.எண். 06321/06322) மற்றும் சென்னை-மதுரை அதிநவீன சொகுசு தேஜஸ் சிறப்பு ரெயில் (வ.எண்.02613/02614) ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story