திருப்பூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன
திருப்பூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன
தளர்வுகள் இல்லாதமுழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்ததன் விளைவாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று முதல் ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்படுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
திருப்பூரில் நேற்று காலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் காலை முதலே மாநகரின் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையை தீவிரமாக மேற்கொண்டனர். ரோட்டில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் தணிக்கை செய்து அதன்பிறகே வாகன ஓட்டிகளை அனுமதித்தனர்.
இ-பதிவு அனுமதி
மருத்துவமனைக்கு செல்லுதல், மருந்து வாங்குதல் மற்றும் இறப்பு நிகழ்வு ஆகியவற்றுக்கு செல்வதற்கு மட்டுமே வாகன ஓட்டிகளை அனுமதித்தனர். மருத்துவம், இறப்பு சம்பந்தமாக வெளி மாவட்டங்களுக்கு இ-பதிவு பெற்றவர்களை மட்டும் செல்ல போலீசார் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர மருந்து கடைக்கு செல்வதாக கூறி நேற்றும் இளைஞர்கள் பிரதான சாலைகளில் சுற்றித் திரிந்தனர். இதனால் அவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்ததுடன் அவர்கள் சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். மாநகரம் முழுவதும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
போலீசாருடன், ஊர்க்காவல் படையினர், டிராபிக் வார்டன்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மாநகரம் முழுவதும் ஒவ்வொரு சாலையிலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக சாலைகளில் காலை முதல் வாகன போக்குவரத்து மிககுறைந்த அளவில் இருந்தது.
சாலைகள் வெறிச்சோடின
மளிகை கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மாநகரின் பிரதான சாலைகள் மற்றும் வீதிகளில் உள்ள கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பெரும்பாலான சாலைகள் வாகன ஓட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மருந்துக்கடைகள், வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை மட்டும் செயல்பட்டன. மேலும் குறிப்பிட்ட சில ஓட்டல்கள் மட்டும் செயல்பட்டன. அங்கு பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட்டது. அதுபோல் மின்னணு வணிக நிறுவனங்களும் வீடு வீடாகச் சென்று பார்சல் சேவை வழங்கினர்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புறநகர் சாலைகளும் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி இருந்தன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் என மொத்தம் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story