ஊரடங்கு விதிகள் மீறல்: நெல்லையில் 47 வாகனங்கள் பறிமுதல்
நெல்லையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 47 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 350 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 11 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story