மதுரையில் மேலும் 16 பேர் உயிரை குடித்த கொரோனா


மதுரையில் மேலும் 16 பேர் உயிரை குடித்த கொரோனா
x
தினத்தந்தி 25 May 2021 1:44 AM IST (Updated: 25 May 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று புதிய உச்சமாக 1,453 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகினர். மேலும் 16 பேர் உயிரிழந்தனர்.

மதுரை,மே
மதுரையில் நேற்று புதிய உச்சமாக 1,453 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகினர். மேலும் 16 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா 2-ம் அலை
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை கடுமையாக உள்ளதால் தினமும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரையிலும் நேற்று புதிய உச்சமாக 1,453 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 22-ந்தேதி 1,355 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. மதுரையில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 57 ஆயிரத்து 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 42 ஆயிரத்து 752 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். நேற்றும் புதிதாக 915 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து சென்றனர். இவர்களை தவிர்த்து 13 ஆயிரத்து 616 பேர் தற்போது அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா கேர் சென்டர்கள், வீட்டு தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
16 பேர் உயிரிழப்பு
மதுரையில் நேற்று மேலும் 16 பேரின் உயிரை கொரோனா பறித்து சென்றிருக்கிறது. அவர்களில் 27 வயது வாலிபரும் அடங்குவார்.
இவரை தவிர 45, 50 வயது பெண்களும், 71, 65 வயது மூதாட்டிகளும் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதுபோல் 55, 56, 56, 50 வயதுடைய ஆண்களும், 69, 68, 80, 75, 65, 75, 73 வயதுடைய முதியவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். 
9 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பலரின் உயிரை பறித்துக் கொண்டிருப்பது மதுரை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
மதுரையில் நேற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது.

Next Story