ஈரோடு மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி; அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்திட தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்பேரில், ஈரோடு மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அரசிடம் இருந்து தடுப்பூசி டோஸ்கள் பெறப்பட்டு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில், 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை மையத்திலும் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், தமிழக முதல்- அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வரப்பெற்றுள்ள நிதிகளை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கலெக்டர் சி.கதிரவனிடம் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் அதிகாரி முருகேசன், ஆர்.டி.ஓ. சைபுதீன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story