ஒரேநாளில் 1,600 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரேநாளில் 1,600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
திருச்சி
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி நேற்று முகக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுநாள் வரை 5,177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, இதுவரை விதிகளை மீறி சுற்றித்திரிந்த 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மட்டும் 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகரத்தில் நேற்று வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று ஒரேநாளில் மட்டும், 1600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.(பொறுப்பு) அருண் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story