ஒரே நாளில் 4277 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 4277 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 May 2021 2:55 AM IST (Updated: 25 May 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் 4277 பேருக்கு கொரோனா

கோவை

கோவையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,277 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 28 பேர் பலியாகினர்.

கொரோனா புதிய உச்சம்

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக் கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கோவையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,277 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 164-ஆக உயர்ந்துள்ளது.

28 பேர் பலி

இது தவிர கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

கோவை அரசு, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். 

இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,048 ஆக உயர்ந்தது.கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

இதன்படி இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 33 ஆயிரத்து 363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story