கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,231 பேர் பாதிப்பு - 16 பேர் சாவு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் பலியாகி உள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 1,231 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் மாவட்டம் முழுவதும் 93 ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 79 ஆயிரத்து 846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 12 ஆயிரத்து 630 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,198 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 16 பேர் இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story