போக்சோவில் கைது


போக்சோவில் கைது
x
தினத்தந்தி 25 May 2021 7:28 PM IST (Updated: 25 May 2021 7:28 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் பகுதியில் சிறுமியை கட்டாய திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூற

காங்கேயம்
காங்கேயம் பகுதியில் சிறுமியை கட்டாய திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கட்டாய திருமணம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில, சின்னமுத்தூர் பகுதியை சேந்தவர் சேகர். இவரது மகன் தினேஷ்குமார் வயது 19. வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 பின்னர் இருவரும் கோவைக்கு சென்று பீளமேடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு சிறுமியை இந்த வாலிபர் கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவு வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று சுற்றித்திரிந்துள்ளார்.
போக்சோவில் கைது
இந்தநிலையில்  சிறுமி காணாமல் போனது குறித்து அவருடைய பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.  இதை  அறிந்த தினேஷ்குமார் சிறுமியை அழைத்து வந்து அவரது ஊரில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த  சிறுமி வீட்டிற்கு வந்து நடந்தது குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
அதைத்தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் தினேஷ்குமாரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

Next Story