கொரோனாவுக்கு ஒரே நாளில் 25 பேர் பலி
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 9 பெண்கள் உள்பட 25 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். 1,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 736 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 9 பெண்கள் உள்பட 25 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். 1,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 736 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
1,854 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று 1,854 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
50 ஆயிரத்தை கடந்தது
இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், அவ்வாறு மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 736 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
25 பேர் பலி
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி. 9 பெண்கள் உள்பட 25 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 364 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story