கொடைக்கானலில் பழங்களை ருசிக்க படையெடுக்கும் மயில்கள்
கொடைக்கானலில் பழங்களை ருசிக்க மயில்கள் படையெடுத்து வருகின்றன.
கொடைக்கானல்:
தளர்வுகளற்ற ஊரடங்கு எதிரொலியாக, சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் சாலைகளில் பொது மக்கள் நடமாட்டமும், வாகனங்களின் போக்குவரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இந்தநிலையில் வன விலங்குகள் நகர் பகுதிக்குள் அதிகளவில் உலா வருகின்றன.
நேற்று அதிகாலை அப்சர்வேட்டரி பகுதியில் மான்கள் கூட்டமாக உலா வந்தது. இதனிடையே மாலை நேரத்தில் ஏராளமான மயில்கள் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய அலுவலக பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வந்தன. இந்த பகுதி மேய்ச்சலுக்கு ஏற்ற இடமாக உள்ளதாலும், பிளம்ஸ் பழங்களின் சீசன் தொடங்கியுள்ளதாலும் மயில்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிளம்ஸ் பழங்களை ருசிப்பதற்காக மயில்கள் படையெடுத்துள்ளன. ஏற்கனவே செண்பகனூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மயில்கள் உள்ள நிலையில் தற்போது அப்சர்வேட்டரி பகுதிக்கு மயில்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story