கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி
கெரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் ஏற்கனவே 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சியில்
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதை கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதற்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து முகாமுக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், டாக்டர் நேரு, நகரமன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்க தலைவர் ரங்கன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய செயலாளர் அரவிந்தன், வக்கீல் சத்தியமூர்த்தி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story