கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள்
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கரடிகள் உலா வருகின்றன.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே மிளிதேன் என்ற கிராம் உள்ளது. இப்பகுதியில் கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக கிராம மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கரடிகள் உலா வருவதால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கரடிகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story