எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே புழுதிபட்டி சத்திரம் பகுதியில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், கலைச்செல்வன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதன் வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த திருச்சி மாவட்டம் தேனிமலைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23), புதுக்கோட்டை மாவட்டம் பனையமங்களப்பட்டி கருப்பையா (41), கிழவயல் அருண்குமார் (25), நாகமங்கலம் விஜயராஜ் (22), புழுதிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் (22) ஆகியோர் காரணமின்றி சுற்றித்திரிந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.