சுத்தம் செய்வதற்காக படகு இல்லத்தில் தண்ணீர் வெளியேற்றம்


சுத்தம் செய்வதற்காக படகு இல்லத்தில் தண்ணீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 25 May 2021 11:15 PM IST (Updated: 25 May 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை படகு இல்லத்தில் குப்பைகள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை சுத்தம் செய்வதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

வால்பாறை

வால்பாறை படகு இல்லத்தில் குப்பைகள் அதிக அளவில் இருப்பதால்  அவற்றை சுத்தம் செய்வதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

படகு இல்லம் 

வால்பாறைக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் படகு இல்லம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. 

இந்த படகு இல்லத்தில் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

தண்ணீர் வெளியேற்றம் 

இதன் காரணமாக இங்குள்ள படகு இல்லம் வெறிச்சோடி கிடக்கிறது. அத்துடன் படகு இல்லத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரில் குப்பைகள் அதிகளவில் கலந்தது. 

இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவற்றை சுத்தம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து படகு இல்லத்தில் உள்ள அடிமட்ட திறப்பை திறந்து தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

தண்ணீர் அனைத்தும் வெளியேறிய பின்னர் படகு இல்லம் சுத்தம் செய்யப்பட உள்ளது. 

புதிதாக நிரப்பப்படும் 

இது குறித்து நகராட்சி  அதிகாரிகள் கூறும்போது, படகு இல்லத்தில் தேங்கி உள்ள தண்ணீர் வெளியேறிவிடும். அதன் பின்னர் குப்பைகள் அகற்றப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்றனர். 


Next Story