18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 May 2021 11:28 PM IST (Updated: 25 May 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திருவாரூர் கலெக்டர் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் சாந்தா, திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வழிகாட்டுதல்கள்படி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, முன்களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தவறாமல் தடுப்பூசி

திருவாரூர் மாவட்டத்துக்கு கோவிட்-சீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் வந்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசிகள் 10 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை, திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் போடப்படவுள்ளது.

கொரோனா நோயிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதா, தாசில்தார் நக்கீரன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story