கிணத்துக்கடவு பகுதியில் 4 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை


கிணத்துக்கடவு பகுதியில் 4 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 25 May 2021 11:29 PM IST (Updated: 25 May 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் 4 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை

கிணத்துக்கடவு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காய்கறி, மளிகை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. 

ஆனால் மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தேவையான காய்கறிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்கப்பட்டு காளியண்ணன் புதூர் ராமர் கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. 

பின்னர் மகளிர் சுய உதவி குழு சார்பில் 4 வாகனங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன. 

தேங்காய், வெண்டைக்காய், கீரை, கத்தரிக்காய், பாவக்காய், சுரைக்காய், செவ்வாழை என மொத்தம் 514 கிலோ காய்கறிகளை அவர்கள் விற்பனைக்காக கொண்டு சென்றனர். 

முன்னதாக இதற்காக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை அதிகாரி சுஜாதா, உதவி அலுவலர் பார்த்திபன், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Next Story