வந்தவாசி அருேக; போலீஸ்காரரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது


வந்தவாசி அருேக; போலீஸ்காரரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2021 11:29 PM IST (Updated: 25 May 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே போலீஸ்காரரை கத்தியால் வெட்டி 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பசவந்தாங்கல் கிராமம் அருகில் சுகநதி ஆற்றில் இருந்து கீழ்கொடுங்காலூர் வழியாக மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் போலீஸ் ஏட்டு குமார் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். 

அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்கள் மினிலாரியில் தப்ப முயன்றனர். 

இதையடுத்து போலீசார் அவர்களை கீழ்பாக்கம் பாலம் அருகே பிடிக்க முயன்றபோது ஏட்டு குமாரின் தலையில் இரும்புக்கம்பி கொண்டு தாக்கிவிட்டு அவர்கள் தப்பி சென்றனர். 

இதில் படுகாயமடைந்த குமார் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து கீழ்கொடுங்காலூர் தனிப்படை போலீசார் போலீஸ்காரரை தாக்கியவர்களை தேடி வந்தனர். 

இந்த நிலையில் பசுவந்தாங்கல் ஆற்றில் பதுங்கியிருந்த பசுவந்தாங்கல் கிராமத்ைத சேர்ந்த கோபிநாத் (வயது 27), எல்-எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த அபி என்ற அரவிந்த், வந்தவாசி தாலுகா ஆரியாத்தூர் கிராமத்தை சேர்ந்த  சகாதேவன் (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியை  பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story