250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 25 May 2021 11:37 PM IST (Updated: 25 May 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

250 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லுப்பட்டி கிராமத்தில் அணைக்கட்டு வாரி என்ற இடத்தில் 250 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஊறலில் இருந்த சாராயம் கீழே ஊற்றி அழிக்கப்பட்டது. இதற்கு பயன்படுத்திய தளவாட சாமான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story